என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தூத்துக்குடி சம்பவம்"
தஞ்சாவூர்:
தஞ்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி சம்பவத்தில் காயமடைந்தவர்களை பார்க்க சென்ற ரஜினிகாந்த் அங்கு பேசும் போது மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசி உள்ளார். அவரது பேச்சு கண்டிக்கத்தக்கது.
போராட்டக் காரர்களால் தான் பிரச்சினை என்ற ரீதியில் அவர்களை வன்முறையாளர்களாக சித்தரித்து பேசியுள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் வன்முறையாளர்கள், பிரிவினைவாத சக்திகள் சம்பந்தப்பட்டிருப்பதாக பேசுகிறார். போராட்டம் நடத்தினால் எப்படி தொழிற்சாலைகள் வரும் என்று கேட்கிறார்.
ஜனநாயக ரீதியில் போராடுவதை கொச்சை படுத்திருக்கிறார். காவிரிக்காக தமிழர்கள் போராடக் கூடாது என்று அவர் சொல்கிறார். பா.ஜனதாவின் ஊதுகுழலாக பேசும் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு கடுமையாக கண்டிக்கத்தக்கது. அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் என்று போராடுவது தவறு என்கிறாரா? பெட்ரோல், டீசல் விலைக்கு போராட வேண்டாம் என்கிறாரா?
சட்ட சபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துப்பாக்கி சூடு பற்றி வாய்திறக்க வில்லை. காவல் துறையின் தவறை மூடி மறைக்க முதல்வர் முயற்சி செய்கிறார். பதவியில் உள்ள நீதிபதியை கொண்டு உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.
ஜூன் 12-ந்தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வருமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. முதல்வர் உண்மைக்கு மாறான தகவல்களை தருவதை கைவிட்டு காவிரியில் தண்ணீர் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன்படி, அண்ணா அறிவாலயத்தில் இன்று மாதிரி சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர். எம்எல்ஏ கருணாசும் பங்கேற்றார். திமுக கொறடா சக்கரபாணி அவைத்தலைவராக நியமிக்கப்பட்டார். எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டார்.
கூட்டம் தொடங்கியதும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக பேசப்பட்டது. #DMKSampleAssembly
ம.தி.மு.க. உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு மற்றும் அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
காவிரி மேலாண்மை ஆணையம் மூலம் நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளதால், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இறுதி தீர்ப்பை எதிர்த்து, ஏழு நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு அனுப்பக்கோரி தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
தூத்துக்குடி படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் இதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்.
மத்திய மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை உடனடியாக குறைப்பது மட்டுமின்றி பெட்ரோல், டீசல் விற்பனையை ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும். வால்மார்ட் இணைய வணிகத்தை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. #sterliteprotest #MDMKresolution #ThoothukudiFiring
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதற்கிடையே, அண்ணாநகர் பகுதியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை அருகே இன்று காலை போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு ஸ்டெர்லைட்டில் சம்பளம் வாங்கிய இயக்குனராக பணியாற்றிய ப.சிதம்பரம் பதில் சொல்ல வேண்டும் என பா.ஜ.க. எம்.பி., சுப்பிரமணியசாமி வலியுறுத்தியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையில் பல ஆண்டுகள் ப.சிதம்பரம் இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதற்காக சம்பளமும் வாங்கி இருக்கிறார் என்பதற்கான எல்லா ஆவணங்களும் உள்ளன. ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக அவர் பதில் சொல்ல வேண்டும் என சுப்பிரமணியசாமி குறிப்பிட்டுள்ளார். #SterliteProtest #ThoothukudiPoliceFiring #SubramanianSwamy
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்